News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 37 பேர் காயம்

 

ஜப்பானில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பான்   நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், தலைநகர் டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபாராகி மாகாணத்தில் பூமிக்கு அடியில் சுமார் 70 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

டோக்கியோ நகரில் நிலநடுக்க அதிர்வுகள் மிகவும் பலமாக உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலக்கடுத்தால் டோக்கியோ, இபாராகி மற்றும் கனகாவா ஆகிய மாகாணங்களில் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் 15 பேர், சைதாமாவில் 9 பேர், கனகாவாவில் 8 பேர், சிபாவில் 4 பேர், இபாராகியில் ஒருவர் 1 காயமடைந்துள்ளார்.

நிலநடுக்கத்தின் அதிர்வால் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் செல்லும் குழாய்கள் உடைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகள் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாதிப்புகளின் அளவைக் துல்லியமாகக் கணக்கிடவும், மக்களுக்கு உடனுக்குடன் உதவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top