News

எப்ஸ்டீன் சர்ச்சையில் மன்னர் சார்லஸின் சகோதரர்! வில்லியம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் “மிகுந்த கவலை” கொண்டுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

அவர்களின் கவனம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் – வின்ட்சர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதன்படி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக, கடந்த ஆண்டு அவரிடமிருந்து பட்டங்கள் மற்றும் அரச குடும்ப பொறுப்புகள் நீக்கப்பட்டன.

அந்த முடிவுக்கு வில்லியம் மற்றும் கேட் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இளவரசர் வில்லியம் மூன்று நாள் பயணமாக சவூதி அரேபியா செல்கிறார்.

இந்த பயணம் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக இருந்தாலும், தனது மாமாவைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து எழும் கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அரச குடும்பத்தினர் அனைவரும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே முதன்மையாக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top