News

சீனாவின் ஷாங்க்சி மாகாண வெடிப்பு சம்பவத்தில் 08 பேர் பலி

 

 

சீனாவின் வடக்கு மாகாணமான ஷாங்க்சியின் ஷூசோவில் உள்ள நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் ஏற்பட்ட இவ்வெடிப்பு சம்பவத்தின் உண்மைகளைக் கண்டறியவென விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சீன அரசாங்க செய்தி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், கவுண்டியிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மலைப்பிரதேசமான ஷானில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தின் உற்பத்தி பட்டறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவசரகால மீட்புப் பணியாளர்கள் வார இறுதி முழுவதும் பணிபுரிந்தபோதும், அப்பகுதியில் அடர்த்தியான மஞ்சள் நிற புகை எழுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பின் விளைவாக எட்டு பேர் இறந்துள்ளதோடு நிறுவனத்தின் சட்டப் பிரதிநிதி காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், பின்தொடர்தல் முயற்சிகளை மேற்பார்வையிடவும் ஷூசோவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் விபத்து விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர்.

இதேவேளை மீட்புக் குழுக்கள் பட்டறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான தேடுதலை மேற்கொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top