News

சவூதி விமானப்படை தளத்தில் தாக்கப்பட்டு இரண்டாக பிளந்த அமெரிக்க விமானம்! 

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு விமானம் சேதமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

E-3 Sentry வகையைச் சேர்ந்த இந்த விமானம் இரண்டு பகுதிகளாகப் பிளந்துள்ளது போல படங்களில் காணப்படுகிறது.

முதலில் இந்தப் படங்கள் அமெரிக்க இராணுவச் செய்திகள் பகிரும் ஒரு சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Gallery

இந்தப் படங்கள், சவுதி தலைநகரமான ரியாத் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தென்கிழக்கில் அமைந்துள்ள Prince Sultan Air Base விமானப்படை தளத்தில் எடுக்கப்பட்டவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

படங்களில் காணப்படும் மின்கம்பங்கள், சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் தரை அடையாளங்கள் செயற்கைக்கோள் படங்களுடன் பொருந்தியுள்ளன.

மேலும், BBC Verify அமைப்பு மார்ச் 11ஆம் திகதி எடுத்த செயற்கைக்கோள் படங்களில் இந்த விமானம் அந்த இடத்தில் இருந்ததையும் கண்டறிந்துள்ளது.

எனினும், அது இதே விமானமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட படங்களில் ஒன்றில் விமானத்தின் வால் எண் தெளிவாகக் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் Flightradar24 தளத்தில் சரிபார்க்கப்பட்டபோது, மார்ச் 18ஆம் திகதி அந்த விமானம் தளத்திற்கு அருகில் பறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம் ஒன்றில், விமானம் இருந்த இடத்திலிருந்து சுமார் 1,600 மீட்டர் தொலைவில் தீ விபத்து ஏற்பட்டதைக் காட்டுகிறது.

 

 

ஆனால், இது அதே தாக்குதலின் ஒரு பகுதியாக இருந்ததா என்பது தெளிவாகவில்லை.

அதேநேரத்தில், ஈரானிய இராணுவத் தாக்குதலில் 12 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்க அதிகாரி Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

 

Gallery

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top