News

சீமான் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்! திரண்ட மக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

மே 18 முள்ளிவாய்க்கால் முத்தமிழ் பேரின எழுச்சி நாள் மற்றும் தமிழீழப்போர் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் என்ற தொனியில் குறித்த கூட்டம் பெருமளவு மக்களுடன் ஆரம்பமாகியுள்ளது.

வீரவணக்க நிகழ்வுகளுடன் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் உலகத்தமிழர்களின் உரிமைகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை சீமான் தான் ஆற்றும் உரையில் முன்னிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top