News

ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் பலி; 27 பேர் மாயம்

 

ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியது. படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை .தெரிவித்துள்ளது. ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த முகமை கூறியது…

.இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில் இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக ஜிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு தேவைப்படாத வயதுடைய குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் அது கூறியது. அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என்று முகமை தெரிவித்தது.

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top