Canada

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவை இணைக்க திட்டம்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது “இணை உறுப்பினராக” கனடாவை இணைத்துக் கொள்வதற்கான கதவுகளைத் திறக்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டேர் லேயன் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வருடாந்த உரையிலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பூகோள அரசியல் சவால்கள், அமெரிக்காவின் வர்த்தகக் கெடுபிடிகள் மற்றும் சீனாவுடனான போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில், ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

கனடியப் பிரதமர் மார்க் கார்னி கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய உர்சுலா வொன் டேர் லேயன், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி மற்றும் ஆர்க்டிக் பிராந்தியக் கொள்கைகள் போன்றவற்றில் கனடாவும் ஐரோப்பாவும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த யோசனை நடைமுறைக்கு வர வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்மொழிவு குறித்து உறுப்பு நாடுகளிடையே இன்னும் தெளிவான வரையறைகள் எட்டப்படவில்லை என்றும், தொலைத்தொடர்பு மற்றும் பால் பண்ணை போன்ற துறைகளில் நிலவும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் இதற்குச் சவாலாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top