News

திலீபனின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து பிரித்தானியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், சிலையை மீளவும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.

குறித்த போராட்டமானது,  நேற்றையதினம் (03.10.2026) முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக 3 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம், வெளிவிவகார அமைச்சகம் வரை சென்று முடிவடைந்திருந்தது.

தியாக தீபம் திலீபனின் நினைவை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கண்டனப் போராட்டத்தில் தேசிய உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

போராட்டத்தின் போது, திலீபனின் திருவுருவச் சிலையை மீளவும் நிறுவ வேண்டும் என்றும், தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top