முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(07.10.2026) காலை கைது செய்யப்படிருந்த நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரை கண் தொடர்பான பரிசோதனைக்காக நவலோக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அரச வங்கி ஒன்றில் 10 மில்லியன் ரூபாய் நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவ்வலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கிருலப்பனை, பூர்வராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இன்று (07) காலை அதிகாரிகளால் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
அவரிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
‘சிறிலியா சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
