News

சீனாவில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

 

சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top