News

சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்

 

உலகில் 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் புதிதாக ஹண்டா என்னும் வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் எலி மூலம் பரவக்கூடிய ஒரு மோசமான தொற்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள உசுஆயியாவில் இருந்து ஆப்ரிக்காவில் கேப் வெர்டே நோக்கி செல்லும் எம்.வி. ஹோண்டியஷ் என்ற உல்லாச சுற்றுலா கப்பல், தற்போது அட்லாண்டிக் கடலின் கேப்வெர்டே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கும் நிலையில் அனைவருக்குமே ஹண்டா என்னும் வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சொகுசு கப்பலான எம்.வி. ஹோண்டியஷில் பயணம் செய்த 3 நபருக்கு ஹண்டா வைரஸ் இருக்கும் சந்தேகத்தில் நெதர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, எம்.வி. ஹோண்டியஷ் கப்பலில் பயணித்த நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் ஏப்.11 அன்று உயிரிழந்தார். அடுத்த 3 நாட்களில் அவரது மனைவியும் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 40 சதவீதம் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top