News

செம்மணியில் அடுத்தடுத்து வெளிவரும் சிறுவர்களின் என்புக்கூடுகள் மீட்பு

 

செம்மணி மனித புதைக்குழி அகழ்வு பணிகள் 24 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த அகழ்வில் இன்றுடன் (14.06.2026) 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றுள் 341 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று(14) 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதுமாக காணப்பட்டுள்ளன.

புதிய வாரம் ஆரம்பித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top