News

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

 

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 5.18 மணியளவில் மிண்டனாவோ தீவின் கடலோரப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு அமைப்பின் இயக்குநர் தெரெசிடோ பகோல்கோல் கூறுகையில், கடந்த ஜூன் 8-ந் தேதி மிண்டனாவோ பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இரு நிலநடுக்கங்களின் மையப்பகுதிகளுக்கும் இடையே 250 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் உள்ளது” என்றார்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top