News

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி வெடித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள், கடலில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் மோதி வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தெரிவித்துள்ளது.

ஈரான் அனுமதிக்காத பாதையில் பயணித்ததாலேயே இந்தக் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில்,ஹோர்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதாகக் கருதப்படும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முக்கிய கடல்வழிப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த ஈரான் முயற்சித்து வருகிறது.

அமெரிக்கா மீது அழுத்தம் ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top