இங்கிலாந்தின் பாலிமெனா நகரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த 3 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதனை கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை விரட்டினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.