News

கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் பயங்கர விபத்து: சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வில்லியம் சான் என்பவர், ஓரிடத்தில் பொலிஸ் வாகனங்கள் நிற்பதைக் கண்டுள்ளார்.

கனடாவில் ஒரு பயங்கர விபத்து: சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் | Car Crash Bike Dangling From Traffic Light Canada

அங்கு சேதமடைந்த கார் ஒன்று நிற்பதை கவனித்த அவர், அங்கு ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதை புரிந்துகொண்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய ஒரு வாகனம் இங்கே நிற்கிறது, இன்னொரு வாகனம் எங்கே என்று சான் தேட, ஒரு மோட்டார் சைக்கிள் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருப்பது அவர் கண்ணில் பட்டுள்ளது.

கனடாவில் ஒரு பயங்கர விபத்து: சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் | Car Crash Bike Dangling From Traffic Light Canada

அதாவது, காருடன் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள், அந்தரத்தில் பறந்து சிக்னல் விளக்கைச் சென்றடைந்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி என ஒரு ஊடகம் கூட குறிப்பிடாத நிலையில், அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top