ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் இன்று(25) காலை சில சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது.
சவூதி அரேபியாவின் மதீனா, ஓமானின் மஸ்கட் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களுக்கு முதல் விமானங்கள் புறப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானிய வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது. பயணிகள் விமான சேவைகள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 8 அன்று, அமெரிக்காவும் ஈரானும் நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் கூறியது.
பேச்சுவார்த்தைக்கான ஒரு முன்மொழிவை ஈரான் சமர்ப்பிக்கும் வரை, ஏப்ரல் 21 அன்று இந்த போர்நிறுத்தத்தை நீடிக்க ஒப்புக்கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
